சென்னை :

மெரிக்காவிற்கு மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறி சென்ற ரஜினி, அங்கு ஒய்யாரமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை அவரது மகள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து நேற்று நள்ளிரவு சென்ன திரும்பினார்.

ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்துள்ள ரஜினி, அதற்கான பணிகளை தொடங்கிய நிலையில், கட்சி பெயர் மற்றும் கொள்கை குறித்து அறிவிக்காமல் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பறந்து விடுகிறார். இந்நிலையில் அடுத்த மாதம் காலா படம் வெளியிடப்பட உள்ள நிலையில், படம் வெளியான பிறகே தனது கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி  வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு டூர் அடித்து வரும்,  ரஜினிகாந்த்  கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தனது மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் உதவியாளர் சஞ்சய் ஆகியோருடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

சுமார் 2 வாரம் அங்கு ஓய்வெடுத்த ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார்.

அமெரிக்காவில் தங்கியிருந்தபோது,  அமெரிக்கா மற்றும் கனடா ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில்,  சென்னை திரும்பிய ரஜினிக்கு சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவருக்கு, அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

ரஜினி தனது மருமகன் தனுஷ் தயாரிப்பில் நடித்துள்ள காலா படம் அடுத்த மாதம் 7ந்தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை ரஜினி கவனிக்க இருப்பதாகவும், படம் வெளியான பிறகே, அரசியல் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

யாருக்கு தெரியும்.. சாமி… மீண்டும் இமயமலை ஏறுமோ…. என்னவோ….