தலைவர் ரஜினியோட ஒவ்வொரு மூவும் அத்தன அதிரடியா இருக்கும். யாரும் ஸ்மெல் பண்ண முடியாது. அம்புட்ட ரகசியமா இருக்கும்.
போன டிசம்பர் 31ம் தேதி, அரசியல் அறிவிப்பு பத்தி, அறிவிப்பேன்னு அறிவிச்சாரு இல்லையா..? அப்பவே ஆளாளுக்கு, “தலைவரு இந்த முறையாவது அரசியலுக்கு வர்றதா சொல்லுவாரா.. இல்லே வழக்கம்போல கத சொல்லிட்டு அடுத்தபட வேலையை பாக்க போயிருவாரா”ன்னு புரியாம தவிச்சாங்க.. நானும்தான்.
இந்த ஒரு மாசத்துக்குள்ள எத்தன அதிரடி பண்ணிட்டாரு பாத்தீங்களா..
கட்சி லோகோன்னு அறிவிச்ச படத்துலேருந்து தாமர பூ படத்த நீக்கினாரு. எல்லாருக்கும் அதிர்ச்சி. ஏன் நீக்கினாருன்னு ஆளாளுக்கு கேட்டாங்க. பாஜகவோட சின்னம் தாமர.. அதனால நீக்கினாருன்னு பேசிக்கிட்டாங்க.
“அது சரி.. தாமர பாஜக சின்னம்னு ஏற்கெனவே ரஜினிக்கு தெரியாதா”னு சில ஆன்ட்டி ரஜினியன்ஸ் கேட்டாங்க. (ஆன்ட்டி இண்டியன்ஸ் இருக்கிறப்ப ஆன்ட்டி ரஜினியன்ஸ் இருக்கக்கூடாதா என்ன..)
இன்னிக்கு, அந்த லோகவுல இருந்த பாம்பு படத்த நீக்கியிருக்காரு. “தென்மாவட்ட ரசிகருங்க சில பேரு, அந்த பாம்பு, குறிப்பிட்ட மதத்துக்கு எதிரானது”ன்னு சொன்னதால நீக்கிட்டாரும்.
இதுக்கு நடவுல, அந்த லோகோவுல இருக்கிற பாபா முத்திரைக்கு சொந்தம் கொண்டாடுது ஒரு மும்பை கம்பெனி. இது பத்தி ரஜினிக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கு.
“அதனால அந்த பாபா முத்திரையும் நீக்கப்படுமா”ன்னு ஆளாளுக்கு தலைய பிச்சிக்கிட்டிருக்காங்க.
கடைசியில படமே இல்லாம, ஒரு லோகோவா அது ஆயிடுமோன்னு பக்கு பக்குன்னு இருக்கு.
ரஜினி ஏன் இப்படியெல்லாம் செய்யறாருன்னு ரோசிச்சேன்.
அப்புறம்தான் புரிஞ்சுது.. இதுக்கெல்லாம் காரணம் பார்த்திபன்தான். ஆமா.. நடிகரு – டைரக்டரு பார்த்திபன்தான்!
ஒரு படத்துல அவரும் வடிவேலும் நடிச்சிருப்பாங்களே மீன் காமெடி..
வடிவேலு மீன்கடை வச்சிருப்பாரு. பக்கத்திலேயே “இங்க நல்ல மீன்கள் கிடைக்கும்”னு எழுதி போர்டு வச்சிருப்பாரு. அந்தப்பக்கம் வர்ற பார்த்திபன், “இங்குதானே விக்கிறே.. இங்கிலாந்திலா விக்கிறே”னு கேப்பாரு.
உடனே, “ஆமாம்ல..”னு சொல்லி, “இங்கு”வ எடுத்துருவாரு வடிவேலு.
அடுத்ததா பக்கத்துல மீன் வித்துகிட்டிருக்கிற அம்மாவ கூப்பிட்டு, “நல்ல மீன்கள் விற்கப்படும்னு எழுதி வச்சிருக்கான்.. அப்படின்னா நீங்கள்லாம் நாற மீன்களா விக்கிறீங்க”னு கேப்பார். அந்தம்மா வடிவேலுகிட்ட சண்டைக்குவர.. “நல்ல” வையும் அழிச்சிருவாரு வடிவேலு.
அடுத்ததா, “இங்கே மான்களையா விக்கிற.. மீன்கள்தானே”னு பார்த்திபன் கேட்க, அதையும் அழிப்பாரு வடிவேலு.
அப்புறம், “விற்கப்படும்” மட்டும் போர்டுல இருக்கும்.
“போர்டையா விக்கப்போறே”னு பார்த்திபன் கேட்க, அதையும் அழிச்சிருவாரு… அந்த போர்டையும் எடுத்துருறதா சொல்வாரு.
இப்போ ரஜினயோட லோகோவுல தாமர போயி, பாம்பு போயி, பாபா முத்திரைதான் இருக்கு. அதுக்கும் ஒரு மும்பை நிறவனம் சொந்தம் கொண்டாடுது. அதையும் அவரு எடுத்தாலும் எடுப்பாரு.
அப்புறமா இருக்கிறது, “உண்மை.. உழைப்பு.. உயர்வு” அப்படிங்கிற வாசகம். அது சரவணா ஸ்டோர்ஸ் ரொம்ப காலமா பயன்படுத்துற வாசகம். ஆக அதுக்கும் ஏதும் ஆட்சேபனை வந்தா அதையும் நீக்கிருவாரு ரஜினி.
ஆக.. படமோ எழுத்தோ இல்லாத புதுமையான லோகோவா அது உருவாகிரும்.
இந்த நிலையிலதான் நாம ஒரு விசயத்தை ரோசிக்கணும்.
இந்த இடத்துலதான் பார்த்திபன் வர்றாரு. ஆமா.. அவரு எதையுமே புதுமையா யோசிக்கிறவரு இல்லையா…?
சமீபத்திலதான் ரஜினிய சந்திச்சாரு பார்த்திபன். தன் மகள் கீர்த்தனாவோட கல்யாணத்தக்காக அழைப்பிதழ் கொடுக்க சந்திச்சதா சொன்னாங்க.
ஆனா உண்மை அது இல்லேன்னு தோணுது.
தன்னோட “மீன்கடை காமெடிய” ரஜினிகிட்ட நினைவுபடுத்தியிருக்காரு பார்த்திபன். அதுக்கப்புறம்தான் தன்னோட லோகோவுலேருந்து ஒவ்வொரு படத்தையா எடுக்க ஆரம்பிச்சிருக்காரு ரஜினி.
இப்போ புரியுதா.. ரஜினி – பார்த்திபன் சந்திப்போட ரகசியம்..!
இந்த மேட்டர், நானே ரொம்ப ரோசிச்சு கண்டுபிடிச்சது.
சரி, இதெல்லாம் உங்க மனசோட இருக்கட்டும்.. யாருகிட்டயும் சொல்லிறாதீங்க!