தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ரஜினி நாயகனாக நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிப்பில் உருவாகும் 169-வது படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது பெரும் கேள்வியாக இருந்தது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்று செய்திகள் பரவின. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் 169-வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
ரஜினி – தேசிங் பெரியசாமி இணையும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் ஏஜிஎஸ் தயாரிக்கும் முதல் ரஜினி படமாக இது அமையவுள்ளது.