கிருஷ்ணகிரி:
தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பூர்வீகம் கிருஷ்ணகிரிதான் என்றும், அவரை தமிழர் என்று அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சியினர்.
“ரஜினியின் தந்தை ரானேஜிராவ் – தாயார் ராம்பாய் ஆகியோரின் முன்னோர்கள் கிருஷ்ணகிரி அருகில் உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தை பூர்வீகமாகக்கொண்டு வாழ்ந்தவர்கள்.
இங்குதான் ரஜினியின் தாய், தந்தை இருவரின் சமாதி “ஆர்.ஆர். நினைவகம்” என்ற பெயரில் இருக்கிறது. இது ராகவேந்திரா அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் முன்னோர்கள் இங்கு வசித்ததற்கான ஆவணங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சார்பதிவகத்தில் இன்னும் இருந்து வருகிறது.
ஆகவே ரஜினிகாந்த்தை தமிழர் என அறிவிக்க வேண்டும்” என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கடிதம் அனுப்பி உள்ளனர்.
இதன் நகலை வருவாய் துறை செயலாளர் மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.