மகா பிரபு, சாக்லெட், ஏய், நிலாவே வா உள்ளிட்ட பல படங்களை டைரக்டு செய்தவர் ஏ.வெங்கடேஷ்.

ஷங்கரிடம் இணை இயக்குநராக இருந்தவர்.

அவர் இயக்கும் புதிய படத்துக்கு ‘ரஜினி’ என பெயர் சூட்டியுள்ளார். இந்த படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

இவர், மகாராஜா, நெல்லு ஆகிய படங்களில் நடித்தவர். பின்னர் அமெரிக்காவுக்கு சென்று ‘ஆக்டிங்’ படித்து விட்டு வந்துள்ளார்.

கதாநாயகியாக இந்தி நடிகை கைநாட் அரோரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் சின்ன ரோலில் நடித்தவர். பஞ்சாபில் இப்போது பிரபல நடிகையாக உள்ளார்.

“இந்த படத்தை 30 நாளில் படமாக்கி முடிக்க திட்டமிட்டுள்ளேன்” என சொல்லும் வெங்கடேஷ், படம் குறித்து மேலும் சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

“ரஜினி, ஆக்‌ஷன் –திரில்லர் கதை. படத்தின் கதாநாயகன் ரஜினி ரசிகர். அவரது கேரக்டர் பெயர்- ரஜினி பிரியன்.

அவரை சின்ன வயதிலேயே எல்லோரும் ‘ரஜினி’ என்றே அழைப்பார்கள்.

எனவே இந்த படத்துக்கு ‘ரஜினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது” என்கிறார், வெங்கடேஷ்.

– பா. பாரதி