“நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் அவருக்கு 20 முதல் 30 சதவிகித வாக்குகள் கிடைக்கும்” என்றஉ தமிழருவி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தமிழருவி மணியன், தெரிவித்ததாவது:
“அ.தி.மு.க.வை தலமையேற்று நடத்திய ஜெயலலிதா மறைந்துவிட்டார், தி.மு.க. தலைவர் கருணாநிதியால் மூப்பு காரணமாக இயங்க முடியவில்லை. இதனால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ தலையெடுத்துவிடக்கூடாது. தற்போதைய அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்ப வேண்டும். அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
மக்கள் செல்வாக்கு உள்ளவரே அரசியலில் வெற்றி பெற முடியும். ரஜினிக்கு 20 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. அவர் சரியாக செயல்பட்டால் இந்த வாக்கு சதவிகிதம் 30 ஆக உயரும்.
தனிநபர் வழிபாடு தவறு என்றாலும், முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால்தான் அறுக்க வேண்டும்.
விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, நீண்டிய நெடிய சினிமா வாழ்க்கையில் முறையாக வரி கட்டினாரா என்று மனசாட்சியை தொட்டு சொல்ல முடியுமா என்று கேட்டவன்தான் நான்.
ஆனால் அரசியலில் நிலைபாடு மாறிக்கொண்டேதான் இருக்கும். அதே நேரம் நான் அடிப்படை கொள்கைகளில் மாறவில்லை என்பதைத்தான் கவனிக்க வேண்டும்” என்று தமிழருவி மணியன் தெரிவித்தார்..