கொரோனா ஊரடங்கின்போது சாத்தான் குளத்தை பி.ஜெயராம் (59). இவரது மகன் ஃபெனிக்ஸ் (31) இருவரும் தங்களது கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி போலீஸார் இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸால் தாக்கப் பட்டதில் தந்தை மகன் இருவரும் இறந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கணடனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. திரையுலகினரும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் உடனே நீதி வழங்க வேண்டும் என குரல் கொடுத்திருக் கின்றனர்.

 


ரஜினிகாந்த நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய டைரக்டர் பா.ரஞ்சித் டிவிட்டர் பக்கத்தில்,’பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தப்பட்டி ருக்கும் சாத்தான் குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக் குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்கு துணியும் தமிழக அரசே! நீங்கள் தான் மக்களின் அரசா??’ என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகை குஷ்பு கூறும்போது.’இந்த குற்ற வாளிகள் தப்பிக்கக்கூடாது. தந்தை மகன் இறந்ததில் அந்த குடும்பத்தினர் தங்களின் அன்பானவர்களை இழந்திருக்கின்றனர். சட்டம் உடனே கடமையை செய்ய வேண்டும். தாமதமாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்’ என குமுறி இருக்கிறார்
நடிகர் ஜெயம் ரவி கூறும்போது, ’மனிதத் தன்மையற்ற செயலால் இறந்திருக்கும் ஜெயராஜ். ஃபெனிக்ஸீக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும். சட்டத்தை விட யாரும் இங்கு உயர்ந்தவர் கிடையாது’ என குறிப்பிட்டுள் ளார்.
ரஜினி நடித்த பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜும் இந்த சம்பவத்துக்கு உடனே நீதி வழங்கப்பட வேண்டும் என கேட்டிருக்கிறார்,