கடந்த சில வருடங்களாகவே புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர். நேற்று (ஏப்ரல் 29) உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இன்று (ஏப்ரல் 30) காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயர் பிரிந்தது. ரிஷி கபூருக்கு வயது 67.

இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார்.இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

ரிஷி கபூரின் மறைவு குறித்து ரஜினி மனமுடைந்துவிட்டேன்… ஆன்மா சாந்தியடையட்டும்.. என் அன்பு நண்பர் ரிஷி கபூர் என கூறியுள்ளார் .