சென்னை: அமைச்சர் எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியிட்டு விழாவில்  அமைச்சர் துரைமுருகன் குறித்து ரஜினி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துரைமுருகன் எனது நீண்ட நாள் நண்பர், எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு எப்போதும் தொடரும் சர்ச்சைகளுக்-கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரஜினி காந்த்.

பல் விழுந்து தாடி நரைத்த பின்னரும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என ரஜினி குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி,  துரைமுருகன் என்னுடைய நீண்ட நாள் நண்பர் என கூறி  கருத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை  செய்தியாளர்களை சந்தித் நடிகர்  ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினார். அப்போது, விஜய் அரசியல் கட்சி தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர்,. விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகத்தக்கு  வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

வயதான நடிகர்களால் சினிமாவில் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை என துரைமுருகன் கூறியது குறித்த கேள்விக்கு, துரைமுருகன் எனது நீண்ட நாள் நண்பர். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு எப்போதும் தொடரும். துரைமுருகனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்ன சென்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என்று கூறினார்.

முன்னதாக,  ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைச்சர் வேலுவின் கலைஞர் என்னும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், “திமுகவில் அசாத்தியமான சீனியர்களை சாதுரியமாக ஸ்டாலின் கையாண்டு வருகிறார்” என்று பாராட்டிப் பேசினார். அப்போது,   மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.  குறிப்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரை குறிப்பிட்ட ரஜினிகாந்த் அவர் கலைஞர் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டியவர் என்றும் கூறினார். கலைஞர் பற்றி மிக உருக்கமாக தனது அனுபவங்களையும் பேசினார் ரஜினி,.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி இதுகுறித்து வேலூரில் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது ரஜினிகாந்தை மிகக் கடுமையாக விமர்சித்து பதில் அளித்தார். “மூத்த வயதான நடிகர்கள் பல் விழுந்து தாடி நரைத்த பின்னரும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்று சினிமாவில் ரஜினி ஒரு பழைய ஸ்டூடன்ட் என்ற அர்த்தத்தில் பேசினார் துரைமுருகன்.

அமெரிக்கா புறப்படுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்  ரஜினியை கண்டித்து துரைமுருகன் கொடுத்த இந்த பேட்டியை பார்த்து கடுமையான கோபமடைந்து விட்டார். இதுதொடர்பாக  திமுக  எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு போன் செய்து, “என்ன துரைமுருகன் இப்படி பண்ணிட்டாரு? கடந்த வாரம் கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் வந்து பேசியது எவ்வளவு நிறைவாக இருந்துச்சோ…. அதைவிட நேத்திக்கு ரஜினிகாந்த் தலைவர் கலைஞரைப் பற்றி பேசி நம்மை ஹானர் பண்ணிருக்காரு. ஆனா துரைமுருகன் நம்ம விழாவுக்கு கெஸ்ட்டா வந்தவரை இவ்வளவு அவமரியாதையா பேசி இருக்காரு. அவர் என்ன நினைச்சுட்டு இருக்காருன்னு கேளுங்க? மந்திரி பதவியில் இருக்கணுமா வேணாமா கேளுங்க?” என்று கடுமையான கோபத்தை கொட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதையடுத்து ஜெகத்ரட்சகன் உடனடியாக துரைமுருகனுக்கு போன் செய்து விஷயத்தைக் கூறியுள்ளார்.

‘நீங்க உடனே ரஜினி கிட்ட போன் பண்ணி பேசுங்க’ என்று ஸ்டாலின் சொல்ல… ரஜினிக்கு போன் செய்து பேசியிருக்கிறார் துரைமுருகன்.

அதைத்தொடர்ந்து, இன்று  வேலூரில் செய்தியாளர்கள் கேட்டதற்கு ஏதோ உணர்ச்சிவசப்பட்டு அப்படி பேசிட்டேன். மனசுல வச்சுக்காதீங்க’ என்று துரைமுருகன் ரஜினியிடம் தெரிவித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.