ராஜேந்திர சோழன் கால்வாய் : நியாண்டர் செல்வன்

Must read

நியாண்டர் செல்வன்
ராஜேந்திர சோழன் கடராம் கொண்டான் என படிக்கிறோம். ஏன் அப்படி போர் புரிந்தான் என பலருக்கும் தெரியாது. ஆனால் அவன் போர் தொடுத்த காரணம் இன்றைக்கு சர்வதேச அரங்கில் பேசுபொருளாகியுள்ளது
சீனாவில் இருந்து ஐரோப்பா, ஆபிரிக்கா, இந்தியா, அரேபியா…இந்த நாடுகளுக்கு வரும் கப்பல்கள் போகும் மிகக்குறுகிய கடல்வழிப்பாதை ஒன்று உள்ளது. அதன் பெயர் மலாக்கா ஜலசந்தி. இங்கே உள்ள முக்கிய துறைமுகம் சிங்கபூர். மலாக்கா ஜலசந்தி மிக குறுகியது. ஒரு நாலைந்து போர்க்கப்பல்களை வைத்தும், தரை மேல் இருந்து தாக்கியும் ஒட்டுமொத்த சீன வணிகத்தையும் முடக்கிவிடலாம்.
மலாகா ஜலசந்திக்கு ஏதேனும் ஆனால் ஒட்டுமொத்த சீனா-ஐரோப்பா, அரேபியா வணிகமும் பாதிக்கபடும்.
இந்த நிலபரப்பின் தன்மையால் மலாக்கா ஜலசந்தி அடிக்கடி கடல்கொள்ளையர் ஆதிக்கதுகுட்பட்டது. ஒட்டுமொத்த வணிகமும் இதனால் பாதிபப்டைந்தது.
ஆனால் பண்டைய தமிழர்கள் இதற்கு அழகான மாற்றை கண்டுபிடித்திருந்தார்கள். மலாக்கா ஜலசந்திக்கு நேர் மேலே போனால் தாய்லாந்து நாட்டின் மிக குறுகிய நிலப்பகுதி காணப்படும். கரா இஸ்துமஸ் என அழைப்படும் இப்பகுதீன் நீளம் 44 கிமி மட்டுமே. சோழ நாட்டில் இருந்து கப்பல்கள் கரா இஸ்துமஸில் இறங்கி அங்கிருந்து 44 கிமிக்கு வண்டிகள், கழுதைகள் இப்படி சரக்கை ஏற்றி சென்றால் மறுபுறம் கம்போடிய நாட்டு கப்பல்கள் நிற்கும். அதில் ஏற்றினால் நேராக தென் சீனாவின் குவான்க்ஸு நகரை சென்று அடையலாம். ஹாங்காஙுக்கு மிக அருகே உள்ள நகரம் இது. (காண்க இணைப்பில் உள்ள படம்)
இதில் குறிப்பிடவேண்டிய விசயம் காம்போஜ நாட்டின் (இன்றைய வியட்நாம், கம்போடியா) இந்த கேந்திரிய முக்கியத்துவம் காரணமாக தமிழக அரசுகள் அதனுடன் மிக நெருங்கிய வணிக உறவு பூண்டிருந்தன. முதலில் பல்லவர்கள் காம்போஜ நாட்டை கைப்பற்றி ஆன்டார்கள். பல்லவ மன்னன் வாரிசின்றி இறந்ததும் பல்லவ அமைச்சர்கள் தம் கிளைவம்சமான கம்போடிய நாட்டுக்கு சென்று அம்மன்னனின் கடைசி வாரிசை அழைத்து வந்து ஆட்சியில் அமர்த்தினார்கள். அவன் தான் நந்திவர்ம பல்லவன்.
பின்னாளில் இது சோழர்கள் கட்டுபாட்டில் வந்தது. யமுனை நதிக்கரையில் இருந்து வந்த இரு பிராமணர்களை சோழர்கள் அங்கே அனுப்பினார்கள். அவர்களில் ஒருவருக்கு கம்போடிய மன்னர் தன் மகள் இந்திரலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். கம்போடியா எங்கும் அமைந்த அங்கோர்வாட் முதலான இந்து ஆலயங்கள் இவர்களின் வழிகாட்டுதலில் கட்டபட்டவையே. ஆக சோழர்கள் சைவர்கள் எனினும் இந்த சோழ பிராமணர்கள் மூலம் தென்கிழக்கு ஆசியா எங்கும் வைணவம் பரவியது.
கரா இஸ்துமஸ் என நாம் இன்று அழைக்கும் இப்பகுதியை சோழர்கள் தலை தக்கோலம் என அழைத்தார்கள். 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க ஆசிரியர் டாலமி கூட கரா இஸ்துமஸ் வழியாக நடந்த சோழ வணிகத்தை பற்றி எழுதியுள்ளார். அந்த ஊரை அவர் தக்கோலா என்கிறார். தக்கோலம் வழியாக தமிழ் வணிகர்கள் கடல், நிலம், மீண்டும் கடல் என பூனான் (கம்போடியாவின் சீனபெயர்) வழியே சீனாவுடன் செய்த வர்த்தகம் பற்றி டாலமி எழுதுகிறார்.
தலை தக்கோலத்தில் ஏகபட்ட தமிழ் ஆலயங்கள் இருந்தன. ஏராளமான தமிழ் மக்கள் வசித்தார்கள். கால வெள்ளத்தில் அனைத்து ஆலயங்களும் பவுத்த ஆலயங்கள் ஆகின. மக்கள் உள்ளூர்வாசிகளை மணந்து, மொழியையும் இழந்து தாய்லாந்து மக்கள் ஆனார்கள்.
ராஜேந்திர சோழன் காலத்தில் மலாக்கா ஜலசந்தி கடற்கொள்ளையரால் கடுமையாக பாதிப்படைந்தது. ஸ்ரீ விஜய அரசு கடற்கொள்ளையருடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அங்கே வரும் கப்பல்களில் கடுமையாக வரி விதித்து வருமானத்தை அவர்களுடன் பங்குபோட்டுக்கொண்டது.
அத்துடன் நில்லாமல் மேலே வடக்கே சென்று தலை தக்கோலத்தையும் பிடிக்க, கடுமையான கோபமடைந்த ராஜேந்திர சோழன் கடாரத்தின் மேல் படை எடுத்து தாய்லாந்து வரை படைகளை நடத்திச்சென்று தலைதக்கோலத்தை மீட்டான்.
ராஜேந்திர சோழன், குலோத்துங்கன் என பலரும் சீன அரசுக்கு தூதுவர்களை அனுப்பி ராஜிய உறவுகளை பேணி வந்துள்ளனர்.

சீனாவின் குவாங்க்ஸூ நகரில் ஏகபட்ட சோழர் தடயங்கள், ஆலயங்கள் உள்ளன. ஜர்னி டு தெ வெஸ்ட் எனும் சீன தொன்மையான நூலில் வரும் குரங்கு அரசன் சுன் வுகோங் சோழர் தொடர்பின் மூலம் அங்கே பரவிய வைணவத்தின் அடையாளமான அனுமான் என இப்போது வரலாற்று ஆசிரியர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.
சுன் வோகுஙை நாயகனாக வைத்து பல சீன திரைப்படங்கள் தயாரிக்காப்ட்டுள்ளன. அவர் சீனாவின் முக்கிய கலாசார அடையாளம். அவரை அனுமனுடன் தொடர்பு படுத்தியவர்கள் பலரும் அவர் வடநாட்டில் இருந்து பவுத்தர்கள் வழியே பரவியவராக கண்டாலும் இப்போது தெற்கே சோழர்கள் மூலம் பரவியவாராக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கர இஸ்துமச் இப்போது மீண்டும் செய்திகளில் அடிபடுகிறது
சூயஸ் கால்வாய் போல சீனா அதை இன்னொரு கால்வாயாக வெட்டி தன் கடல் வணிகத்தை காத்துக்கொள்ள முற்படுகிறது
சோழன் கண்ட வணிகப்பாதை, சீன வணிகத்துக்கு தமிழ் வணிகர்கள் பயன்படுத்திய கால்வாயை இன்று சீனா வெட்டவிருப்பதாக செய்திகள் வருவது நல்ல விசயம்தான்.
இந்திய அரசு தாய்லாந்து அரசுடன் பேசி, செலவுகளில் ஒரு பகுதியை ஏற்று தானும் கரா கால்வாயை பயன்படுத்தும் உரிமையை பெறவேண்டும். அத்துடன் அதற்கு ராஜேந்திர சோழன் கால்வாய் எனவும் பெயர் வைக்கவேண்டும்.
நடக்காதுதான்…
ஆனா நடந்தா நல்லா இருக்கும்
மூல ஆய்வுகட்டுரைகள்:
http://sino-platonic.org/compl…/spp081_monkey_sun_wukong.pdf
Dr.G.Devianayakam, “The interactions of the Chola empire in the Chao
Phraya delta”,Thanjai tamil university.
 
 
தொகுப்பு : செல்வமுரளி

More articles

Latest article