
கிர்கிஸ்தான்:
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கி உள்ள போட்டிகள் மார்ச் மாதம் 4ந்தேதிவரை பல்வேறு எடை பிரிவில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் கலந்துகொள்ள 9 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்களைகள் கிர்கிஸ்தானுக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கிரேக்கோ ரோமன் பிரிவின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ராஜேந்தர் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.
இந்த பிரிவில் நடைபெற்ற போட்டியில், ஜப்பானின் ஷொட்டா தனோகுரா தங்கப்பதக்கம் வென்றார். அதுபோல, வெள்ளிப்பதக்கத்தை கிர்கிஸ்தானின் சோலாமன் ஷர்ஷென்பெகோவும் தட்டிச்சென்றனர்.
வெண்கலப்பதக்கத்தை ராஜேந்திர குமாரும், கஜகஸ்தானின் கோர்லன் சாகன்ஷாவும் பகிர்ந்து கொண்டனர்.
Patrikai.com official YouTube Channel