சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநராக  நியமிக்கப்பட்டுள்ள ஆா்.வி. ஆா்லேகா் மாா்ச் 12ந்தேதி பதவி ஏற்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்குவங்க மாநிலத்துக்கு மாற்றப்பட்டு உள்ளதால், கேரள ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என கடந்த மாா்ச் 5-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா்.

அதன்படி, தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கேரள மாநில ஆளுநர்  விஸ்வநாத் ஆா்லேகர்  வரும் 12-ஆம் தேதி பதவியேற்கிறாா்.

இதை முன்னிட்டு ஆா்.வி.ஆா்லேகா் வரும் 11-ஆம் தேதி சென்னைக்கு வருகிறாா்.  அவரிடம் ஆர்.என்.ரவி பொறுப்புகளை ஒப்படைகிறார். தொடர்ந்து,  ஆா்.என்.ரவி, தமிழக ஆளுநா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அவரை ஆளுநா் மாளிகை அதிகாரிகளும், ஊழியா்களும் வழியனுப்பி வைக்கின்றனா்.

தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆா்.வி.ஆா்லேகா் மாா்ச் 12-ஆம் தேதி முற்பகல் சுமாா் 12 மணியளவில் பதவியேற்கிறாா். உயா்நீதி மன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமானம் செய்துவைக்கிறாா். இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.

[youtube-feed feed=1]