ஜெய்ப்பூர்:

பிஎல் டி-20 போட்டியில் பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் களமிறங்கிய  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களாக  கேப்டன் ரகானே, பட்லர் களமிறங்கினர். பட்லர் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க, ரகானே 9 ரன் எடுத்து ஆண்ட்ரூ டை பந்துவீச்சில் அக்‌ஷதீப் நாத் வசம் பிடிபட்டார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்க ஆட்டம் களையிழந்தது.   ராஜஸ்தான் அணி 64 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், பட்லர் – சஞ்சு சாம்சன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 53 ரன் சேர்த்தது. ஆனால் பட்லர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தார்.  82 ரன் எடுத்த நிலையில்  (58 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) முஜீப் உர் ரகுமான் சுழலில் சிக்கி வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து களம் கண்ட பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி இருவரும் அதிரடியாக விளையாடினர். பின்னி 11 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, டை வீசிய கடைசி ஓவரில் ஸ்டோக்ஸ் 14, ஆர்ச்சர் (0), உனத்காட் (0) ஆட்டமிழந்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்திருந்தது. சிறப்பாக பந்துவீசிய ஆண்ட்ரூ டை 4 ஓவரில் 34 ரன் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினா. ராஜஸ்தான் ராயல் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 159 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ராகுல்-கெயில் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். இதன் காரணமாக பஞ்சாப் அணி ரசிகர்கள் சோகமடைந்தனர். அதுபோல  தொடர்ந்து விக்கெடுகள் மளமளவென சரியா பஞ்சாப் நிலையில் ராகுல் மட்டுமே ஈடுகொடுத்து ஆடினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராகுல் 95 ரன்கள் எடுத்தார்.

லோகேஷ் 70 பந்தில் 95 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் கவுதம் 2, ஆர்சர், உனாத்கட், ஸ்டோக்ஸ், சோதி தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

சொந்த மண்ணிலேயே பஞ்சாப் தோல்வி அடைந்தது பஞ்சாப்அணி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.