ஜெய்பூர்: பரப்பரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதலமைச்சர் அசோக் கெலாட் சந்தித்து பேசி உள்ளார்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த அசோக் கெலாட் போர்க்கொடி உயர்த்தினார். தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பைலட் தனியே முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
அதை எதிர்த்து சச்சின் ஆதரவு எம்எல்ஏக்கள் நீதிமன்றம் சென்றனர். வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் , சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. காங். அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில், ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற கெலாட், ஆளுநர் மாளிகை வளாகத்தில் காத்திருந்தார். அப்போது, சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.