துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் துவக்க வீரர் ஷப்னம் கில் 24 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார்.
ராகுல் திரிபதி 34 பந்துகளில் 39 ரன்களை அடித்தார். நிதிஷ் ரானா மற்றும் சுனில் நரைன் டக் அவுட் ஆனார்கள். அதேசமயம், கேப்டன் இயன் மார்கன் 35 பந்துகள் ஆடி 5 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களைக் குவித்தார்.
ஆண்ட்ரூ ரஸ்ஸல் 11 பந்துகளில் 25 ரன்களை அடித்தார். இதில் 3 சிக்ஸர்கள் அடக்கம். பேட் கம்மின்ஸ் 11 பந்துகளில் 15 ரன்களை அடித்தார்.
இறுதியில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 என்ற சவாலான ரன்களை சேர்த்துள்ளது கொல்கத்தா அணி.