ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் கொளுத்தும் வெயில் காரணமாக தறிகெட்டு ஓடிய குதிரை, எதிரே வந்த கார்மீது மோடி,கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்தவர் பலத்த காயம் அடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தங்கவாலா என்பவருக்கு சொந்த குதிரை, வெயில் கொடுமை தாங்க முடியாமல், கட்டி வைக்கப்பட்டிருந்த கயிறை அறுத்துக் கொண்டு ஓடியது.

ஜெய்ப்பூர் அருகே உள்ள   ஹன்சன்புரா எனும் இடத்தில் சாலை ஓரம் கட்டிவைக்கப்பட்டிருந்த குதிரைக்கு,  .காலை வேலையில் தீவனங்கள் போடப்பட்டன. இருந்தாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குதிரை  கயிற்றை அறுத்துக்கொண்டு சாலையில் தறிகெட்டு ஓடியது.

அப்போது எதிரே வந்த ஒரு காரின் மீது தாவி குதித்து, அதன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு, குதிரை உள்ளே பாய்ந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த டிரைவர் பங்கஜ் ஜோஷி என்பவர் பலத்த படுகாயங்களுடன் உள்ளே சிக்கிக்கொண்டார். இதையடுத்து அவர்களை பொதுமக்கள் மீட்க முயற்சித்தனர். ஆனால், அவர்களால் முடியாமல் போகவே, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த  வனத்துறையினர் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு குதிரையையும், டிரைவரையும் காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.