பிரசவத்தின் போது குழந்தையின் காலை பிடித்ஹ்டு இழுத்ததால் தலை துண்டான சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம் ராம்கார் பகுதியை சேர்ந்தவர் திலோக்பதி. இவரது மனைவி தீஷா கன்வர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். தீஷா கர்வருக்கு பிரசவலி ஏற்பட்டதை அடுத்து ராம்நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பெண் செவிலியர்கள் இல்லாத நிலையில் மருத்துவர்களும் வெளியே சென்றுவிட்டனர். அதனால் மருத்துவமனையில் இருந்த ஆண் செவிலியர்களான அமிர்த்லால் மற்றும் ஜுன்ஜ்கார்சிங் அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர். பிரசவத்தின் போது முதலில் குழந்தையின் தலை வெளியே வருவதற்கு பதிலாக கால்கள் வெளியே வந்துள்ளன. அப்போது பிரசவம் பார்த்த ஆண் செவிலியர்கள் இருவரும் குழந்தையின் காலை பலமாக பிடித்து இழுக்க தலை துண்டாகி உடல் மட்டும் வெளியே வந்தது.
தலை மட்டும் வயிற்றுக்குள்ளே இருக்க உடல் பாகம் மட்டும் வெளியே வந்தது. அதன்பின்னர் அந்த ஆண் செவிலியர்கள் நடந்ததை அந்த பெண்ணிடமோ, உறவினர்களிடமும் சொல்லாமல் வெளியே வந்த உடலின் பகுதியை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் மருத்துவர்களிடம் சென்ற செவிலியர்கள் இருவரும், அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்து விட்டதாகவும், நஞ்சுக்கொடி மட்டும் வெளியே வராமல் வயிற்றுக் குள்ளே இருப்பதாக கூறினர்.
குழந்தையின் தலை துண்டாகி வயிற்றுனுள் இருந்ததால் அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது தலை வயிற்றுனுள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடிபோதையில் இருந்த ஆண் செவிலியர்கள் அலட்சியமாக மருத்துவம் பார்த்ததில் குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்ட அமிர்த்லால் மற்றும் ஜுன்கார்சிங் மீது இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பேசிகையில், “ எனது மனைவியை மருத்துவமனையில் சேர்க்கும்போதே அந்த ஊழியர்கள் அலட்சியமாக பேசினார். நடந்து கொண்டார்கள். எங்களை அவர்கள் அவமதித்தனர். முறையாக சிகிச்சை அளிக்காமல் குழந்தையை கொன்றுவிட்டனர் “ என்றார்.