தய்பூர்

ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபால் பக்டே அக்பருக்கும் ஜோதாவுக்கு நடந்த திருமனம் என்பது பொய்யான கதை என தெரிவித்துள்ளார்/

ராஹபுத்திர இளவரசி ஜோதாவுக்கும் முகலாயப் பேரரசர் அக்பருக்கும், இடையில் திருமணம் நடைபெற்றதாக சரித்திரத்தில் உள்ளது.  இந்த சரித்திரக் கதையின் அடிப்படையில் பல நாட்டுப்புறஒபாடல்கள் வடநாட்டில் இயற்றப்பட்டுள்ளன,  அது மட்டுமின்றி இது குரித்து  திரைப்படமும் வந்துள்ளத,

இந்நிலையில் உதய்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பக்டே,

“ஜோதாவும், அக்பரும் திருமணம் செய்துகொண்டதாக கூறுகின்றனர். அவர்களின் கதையை படமாகவும் எடுத்துள்ளனர்(ஹ்ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ஜோதா அக்பர்). வரலாற்றுப் புத்தங்களும் அதையே கூறுகின்றன. ஆனால் அது உண்மையல்ல. அது ஒரு பொய். பர்மல் என்ற ஒரு மன்னர் இருந்தார், அவர் ஒரு வேலைக்காரியின் மகளை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார்.

ஆங்கிலேயர்கள் நமது ராஜாக்களின் வரலாற்றை மாற்றினர். அவர்கள் அதை முறையாக எழுதவில்லை, அவர்களின் வரலாற்றின் பதிப்பு ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர், சில இந்தியர்கள் வரலாற்றை எழுதினார்கள், ஆனால் இன்னும் ஆங்கிலேயர்கள் காலத்தில் எழுதப்பட்டவையே பெரிதாக அறியப்படுகின்றன.

மகாராணா பிரதாப் தனது சுயமரியாதையை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. வரலாற்றில், அக்பரைப் பற்றி அதிகமாகவும், மகாராணா பிரதாப்பைப் பற்றி குறைவாகவே கற்பிக்கப்படுகிறது”

எனத் தெரிவித்துள்ளார்,