பிரயாக் ராஜ்
மகா கும்பமேளாவையொட்டி திரிவேணிசஙகத்தில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா புனித நீராடினார்.

கடந்த மாதம் 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
உலகெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திற்கு வருகை தந்து புனித நீராடி வருகின்றனர்.
நேற்று ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, தனது அமிச்சரவை உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அவர்கள் அனைவரும் வழிபாடு செய்ததுள்ளனர்.