ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

பாஜக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது. ராஜஸ்தான் முதல்வராக அக்கட்சியைச் சேர்ந்த பஜன்லால் சர்மா பதவியில் உள்ளார்.

கடந்த சில நாட்களாக இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

பஜன்லால் சர்மா எக்ஸ் பக்கத்தில்,

“நான் தனிமையில் இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனைகளை முழுமையாக பின்பற்றுகிறேன். மேலும் வரவிருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மெய் நிகர் ஊடகம் மூலம் பங்கேற்பேன்”

என்று பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]