ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் வரும் 29-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறு உள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் புகைப்படமும் இடம்பெறுகிறது. ஒரே பெயரில் 2, 3 வேட்பாளர்கள் போட்டியிடும் போது குழப்பம் தவிர்க்க புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகிறது என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஸ்வினி பகத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் அஜ்மீர், அல்வர் லோக்சபா தொகுதிகள், மண்டல்கிரக் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 29-ம் தேதி நடக்கிறது. முன்னதாக டோல்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இதேபோன்று வேட்பாளரின் புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது.லோக்சபா தேர்தலில் தற்போது தான் முதன்முறையாக பயன்படுத்தப்படுகிறது.