போன் மூலம் சாப்ட்வர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களை மிரட்டி பணம் பறிந்து வந்த ராஜஸ்தான் பிஜேபி தலைவரின் பேரன் ஊழல் தடுப்பு போலீசாரில் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநில பாரதியஜனதா மூத்த தலைவர் ராதே ஷியாம். அவரது பேரன் சாகில் ராஜ்பால்.
ராஜஸ்தானில் சர்வதேச போன் கும்பல் ஒன்று சில அதிகாரிகள் மற்றும் சாப்ட்வர் ஊழியர்களிடம் போனில் மிரட்டி அடிக்கடி பணம் பறிந்து வந்துள்ளது.
இதுகுறித்த புகாரை தொடர்ந்து, ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அப்போது, இந்த சர்வதேச போன் மிரட்டல் கும்பலுக்கு தலைவராக மாநில பிஜேபி மூத்த தலைவர் மூத்த தலைவர் ராதே ஷியாமின் பேரன் சாஹில் ராஜ்பால். ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இந்த சர்வதேச மிரட்டல் அழைப்புக் கும்பலுக்கு தலைவராக ராஜ்பால் செயல்படடு வந்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.