அபுதாபி: பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது ராஜஸ்தான் அணி. இதன்மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது அந்த அணி.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களைக் குவித்தது. சற்று சவாலான இலக்கை நோக்கி பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஆரம்பமே அசத்தல்தான்.
துவக்க வீரர் ராபின் உத்தப்பா 23 பந்துகளில் 30 ரன்களை அடிக்க, மற்றொரு துவக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 50 ரன்களையும், சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 48 ரன்களையும் அடித்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.
அதேசமயம், நான்காவது & ஐந்தாவது விக்கெட்டுகளாக களமிறங்கிய கேப்டன் ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரும் அதிரடியாக ஆடி, வெற்றியை விரைவிலேயே எட்டினர்.
ஸ்மித் 20 பந்துகளில் 31 ரன்களையும், பட்லர் 11 பந்துகளில் 22 ரன்களையும் விளாச, 17.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 186 ரன்களை எடுத்து பெரிய வெற்றியை ஈட்டியது ராஜஸ்தான். இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.
இன்றைய போட்டியில், மொத்தமே 7 விக்கெட்டுகள் மட்டுசூம வீழ்த்தப்பட்டன. ஆனால், மொத்தம் 225 பந்துகளில் 371 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இன்றைய ஆட்டம் பேட்ஸ்மென்களில் ஆட்டமாக இருந்தது.