ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநில அமைச்சரவை மதமாற்ற தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ராஜஸ்தான் முதல்வர்  பஜன் லால் சர்மா ‘எக்ஸ்’ தளத்தில்,

“கட்டாய மதமாற்றத்தை தடுப்பதில் ராஜஸ்தான் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. இதன்படி சட்டமன்றத்தில் ‘ராஜஸ்தான் சட்டவிரோத மதமாற்ற தடை சட்ட மசோதா- 2024’ -ஐ தாக்கல் செய்ய அமைசரவையில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல், மோசடி அல்லது கட்டாயத்தின் அடிப்படையில் ஒரு நபரின் மதத்தை மாற்றும் முயற்சியை இந்த சட்ட மசோதா தடை செய்கிறது. சட்டவிரோத மதமாற்றத்திற்காக ஒரு திருமணம் நடத்தப்பட்டால், அந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்கும் உரிமை குடும்ப நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும்”

என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து துணை முதல்வ்ச்ட் பிரேம் சந்த் பைரவா,

“மக்கள் தங்களுக்கு அறிமுகமில்லாத மதங்கள் மீது கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் விதமாக பிற மாநிலங்களில் இருக்கும் கொள்கைகளை பரிசீலித்து, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது”

என்று தெரிவித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]