‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து, தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி.
இதனிடையே, இந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
தற்போது நேரலை ஒன்றில் பேசும் போது, ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக ராஜமெளலி உறுதிசெய்துள்ளார். இந்தப் படத்தை துர்கா ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
ராஜமெளலி – மகேஷ் பாபு இருவரும் இணைவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. தற்போது ராஜமெளலி உறுதி செய்திருப்பதால் மகேஷ் பாபு ரசிகர்கள் பெரும் உற்சமாகியுள்ளனர்.