
ராஜமௌலி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருவதும், ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே .
திட்டமிட்டபடி அக்டோபரில் வெளியிட முடியவில்லை என்றாலும், அடுத்த வருடம் ஜனவரியில் படத்தை வெளியிடுவதில் அனைவரும் உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில் இந்த பேரிடர் காலத்தில் காவல்துறையின் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் சொல்லும்விதமாக 20 நிமிடங்களுக்குள் ஒரு குறும்படத்தை இயக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளார். தெலுங்கானா காவல்துறை அதிகாரிகளையும் இது சம்பந்தமாக சந்தித்துள்ளார்.
[youtube-feed feed=1]