சென்னை: ராஜாஜியின் 50வது நினைவு ஆண்டை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சி சென்னையில், சிறப்பு புகைப்பட கண்காட்சி  நடைபெற்று வருகிறது. இதை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வாழ்த்தினார்.

மூதறிஞர் இராஜாஜியின் 50ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு அரசியல், இலக்கியம், ஆட்சி நிர்வாகம், வாழ்க்கை வரலாற்றை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், அன்னாரின் அரசியல், இலக்கியம், ஆட்சி நிர்வாகம், வாழ்க்கை வரலாற்றை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்

சூரில் 1878-ம் ஆண்டு பிறந்த ராஜாஜி, வக்கீலாக தன்னுடைய பணியை தொடங்கியவர். மதுவிலக்குக்கு எதிராகவும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்திலும் தன்னுடைய பங்களிப்பை ஆற்றியவர். சென்னை மாநில முதல்-அமைச்சராகவும் அதேபோல இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தவர். மூதறிஞர் ராஜாஜியின் பயணங்களை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழகத்தின் செய்தித்துறை சார்பில் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சியானது நேற்றைய தினம் தொடங்கப்பட்டது.

இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சி ஜனவரி 1-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.