சென்னை

மிழக சட்டசபையில்  இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டபடி, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வருகை தந்தனர். மேலும், சபாநாயகர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர்.

, ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்காக கூடிய சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஆயினும், சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில், உரையாற்றாமல் அவையில் இருந்து ஆளுநர் புறப்பட்டு சென்றதால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநர் வெளியேறியது பற்றி ஆளுநர் மாளிகை

“தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவுடன் தேசிய கீதம் பாட வேண்டும் என முதல்-அமைச்சர், சபாநாயகரிடம் ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால், ஆளுநர் வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இதனால், தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டு உள்ளது

தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது என்பது அரசமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் கடமையாகும்.

அதனை பாட மறுத்தது வருத்தத்திற்குரிய விஷயம்  இதனால், மிகுந்த வருத்தத்துடன் அவையில் இருந்து கவர்னர் வெளியேறினார். அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என்று ஆளுநர் வெளியேறினார்:

என விளக்கம் தெரிவித்து உள்ளது.