சென்னை:
மிழகத்தில் நாளை முதல் மழைக்குவாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில்அந்தமான் அருகில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, இன்று புயலாக மாறுகிறது.

இந்த புயல் காரணமாக, தமிழகத்தில் டெல்டா மற்றும் வடக்கு கடலோர பகுதிகள் என, நாளை முதல் கன மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.