download

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

 தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகமாகவே இருக்கிறது.  ஒரு சில ஊர்களில்  நேற்று சராசரியாக 100 டிகிரி வரை வெப்பம் பதிவானது.

வானிலை ஆய்வு மையம், “தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர நிலவரப்படி, நாகர்கோவில் 6 செ.மீ., தக்கலை 5 செ.மீ., குளச்சல் 4 செ.மீ., நடுவட்டம், பூதப்பாண்டி, குழித்துறை, மயிலாடி, கூடலூர் பஜார் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., மழை பதிவானது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 98.6 டிகிரியும், குறைந்தபட்சம் 82.4 டிகிரியும் வெப்பம் பதிவாக கூடும்.
சென்னையில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. தரைகாற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வீசுகிறது.
அதேபோல் கடல் காற்றைப் பொருத்தவரையில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறது. இதனால் ராமேசுவரம், கன்னியாகுமரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக கடலுக்கு சென்று திரும்ப வேண்டும்”  இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.