சென்னை
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி உள்ளது. அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்குச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் கடலோரப் பகுதியில் காணப்பட்ட கடல் சீற்றத்தால் 40 குடிசைகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் அதே பகுதியில் உள்ள 150 தென்னை மரங்களும் வேரோடு கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று அதாவது மார்ச் 7 அன்று பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் இன்று காலை அறிவித்துள்ளார்.