சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

வருடந்தோறும் தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவைத் தருகின்ற வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

எனவே தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.