சென்னை

டுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை பெய்யலாம்

தென் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதிக அள்வில் பெய்து வருகிறது.   குறிப்பாகக் கேரள மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி தேசிய பேரிடர் மீட்பு படை கேரளாவுக்கு விரைந்துள்ளது.

இந்திய வானொலி மையம் இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது.

அதாவது செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருப்பத்தூர் , வேலூர் , திண்டுக்கல் , தேனி , மதுரை , ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.