சென்னை

சென்னை வான்லை ஆய்வு மையம் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலா என தெர்வித்துள்ள்து.

கேரளா மற்றும் வடமாநிலங்களில்  தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகலில் நல்ல வெயிலும், இரவில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமாலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.