சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் நாளை நேரில் ஆய்வு செய்கிறார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்குவார் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதல் கடந்த 15 நாட்களாக மழை கொட்டி வருகிறது. இந்த மழையால் சென்னை உள்பட டெல்டா மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த வாரம் பெய்த மழை காரணமாக, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதுடன் பல நூறு ஏக்கர் பயிர்களும் நீரில் மூழ்கின. சீர்காழியில் அதிகபட்சமாக 44 செ.மீ. மழை பெய்தால், அந்நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன், நிவாரண உதவிகளையும் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் நாளை நேரில் ஆய்வு செய்கிறார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்குவார் என கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி, நேற்று சென்னையில் மழைநீர் தேங்கிய சென்னை புறநகர் – முகலிவாக்கம் திருவள்ளுவர் நகர்,பெல் நகர் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து, மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியளார்களிடம் பேசும்போது, தமிழகஅரசு தண்ணீர் தேங்கவில்லை என பொய் சொல்கிறது என கடுமையாக விமர்சித்தார். அதைத்தொடர்ந்து, இன்று அங்கு விரைந்து வந்த அமைச்சர்கள், அதிகாரிகள், தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டதுடன், நிவாரண உதவிகளையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.