சென்னை: பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக சார்பில் கவனஈர்ப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் 25 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்தியஅரசு  திட்டமிட்டு உள்ள நிலையில், அதை தடுக்கும் வகையில்,  பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன.

இந்த நிலையில், இன்று மீண்டும் பாராளுமன்றம் கூடுகிறது. இதன் காரணமாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு,  பாராளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு  தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்புவது குறித்து விவாதிக்க கோரி  நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

Fenjal Fengal Parliament ஃபெஞ்சல் ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு பாராளுமன்றம்rms…