ம்பால்

ணிப்பூரில் நடைபெறும் கலவரம் காரணமாக அம்மாநிலத்தில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் நடந்த ‘பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணியில் மோதல் ஏற்பட்டது.  வேகமாக இது குறித்த தகவல் பரவியதால், அண்டை மாவட்டங்களில் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  பல இடங்களில் மேதே சமுதாயம் மற்றும் பழங்குடியின மக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.

மணிப்பூர் மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டு தர்பங் பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக வன்முறை நீடித்தது. அம்மாநில காவல்துறையால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  இதையொட்டி, ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினர் உடனடியாக கலவரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் 9 ஆயிரம் காவல்துறையினரை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு கல்வி நிலையங்களில் படிக்கும் மேகாலயா மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும்படி மாநில அரசு அதிகாரிகளுக்கு மேகாலயா முதல்வர் கன்ராட் கே சங்கம் உத்தரவிட்டுள்ளார்.

வியாழக்கிழமை அன்று கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு கலவரக்காரிகளைக் கண்டதும் சுட உத்தரவிட்டிருந்தது.  இக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் பேர் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரால் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  ஆயினும் இறந்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.  இந்த நிலையில் அம்மாநிலத்திற்குச் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே தெரிவித்துள்ளது.