பெங்களூரு

பெங்களூரு – மைசூரு ரயில் தடத்தில் அதிவேக ரயிலில் அமைச்சர் பியூஷ் கோயல் தண்ணீர்  சோதனை நடத்தி உள்ளார்.

ரயில்கள் அதிர்வற்று செல்வதைச் சோதிக்கத் தண்ணீர் சோதனை நடத்துவது வழக்கமாகும்.   ஓடும் ரயிலில் ஒரு பெட்டியில் ஒரு கிளாஸ் நிறைய தண்ணீர் ஊற்றி வைத்து பயணத்தின் போது அது சிந்தாமல் இருந்தால் சோதனையில் வெற்றி பெற்றதாக கருதப்படும்.  இதுவே தண்ணீர் சோதனை ஆகும்.

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பெங்களூரு மற்றும் மைசூரு இடையே உள்ள பாதை செப்பனிடப்பட்டுள்ளது.   இந்த பணியின் போது தண்டவாளங்கள் பதித்தல், மாற்றுதல் மற்றும் பாதையைப் பலப்படுத்தல் போன்றவை நடந்துள்ளன.  சுமார் 130 கிமீ தூரம் உள்ள இந்த பாதை சுமார் ரூ. 40 கோடி செலவில் செப்பனிடப்பட்டுள்ளது.

இந்த பாதையில் ஓடும் ரயிலில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தண்ணீர் சோதனை நடத்தியதாக டிவிட்டரில் பதிந்துள்ளார்.  மேலும் இந்த சோதனையின் போது கிளாசில் உள்ள தண்ணீரில் ஒரு சொட்டு கூட கீழே விழவில்லை என்பதால் பயணம் அதிர்வின்றி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=UP8jIR2qTl8]