பாட்னா

ரெயில்வேத் துறை ஓட்டல்கள் மூலம் நிலங்களைப் பெற்றபின் அந்த ஓட்டல்களை கை மாற்றியதாக லாலு பிரசாத் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரான லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே அமைச்சராக முன்பு பதவி வகித்து வந்தார்.   அவரது பதிவிக்காலத்தின் போது 2006 ஆம் வருடம் ரெயில்வே துறை நடத்தி வந்த இரு ஓட்டல்களை சட்ட விரோதமாக பாட்னாவில் நிலத்தை பெற்ற பின் தனியாருக்கு அளித்தாதாக குற்றச்சாட்டு எழுந்தது.   சிபிஐயின் பொருளாதாரக் குற்றங்கள் பிரிவு கடந்த 2017 ஆம் ஆண்டு இது குறித்து லாலு பிரசாத் யாதவ் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வற்புறித்தியது.

அந்த வழக்கின் சட்ட நிபுணர்கள் நிலம் லாலுவுக்கு அளித்ததற்கான ஆதாரம் இல்லை எனக் கூறி உள்ளது.    ஆனால் அந்த கருத்தையும் மீறி தற்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.   இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் விசாரித்ததில் கடந்த 2017ஆம் வருடம் ஜூன் மாதம் 2ஆம் தேதியன்று லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே நிர்வாகம் ராஞ்சி மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் நடத்தி வந்த இரு ஓட்டல்களை சுஜாதா ஓட்டல்ஸ் என்னும் நிறுவனத்துக்கு அளித்தது உண்மை என கண்டறிந்துள்ளது.   மேலும் இதற்கான ஒரு பினாமி நிறுவனத்தின் மூலம் பாட்னாவில் நிலம் கைமாற்றப்பட்டதையும் கண்டு பிடித்துள்ளது.