சென்னை:
கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை ரயில்சேவை உள்ள நிலையில், வேளச்சேரியில் இருந்து தாம்பரம் வரை ரயில்சேவை தொடர்வது குறித்து, விரைவில் ஆய்வுப்பணிகள் நடைபெறும் என்ற ரயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது.
வேளச்சேரி முதல் தாம்பரம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் தண்டவாளங்கள் அமைப்பது, ரயில் நிலையங்கள் அமைப்பது உள்பட பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப, போக்குவரத்து வசதியை மேம்படுத்த மாநில அரசு களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, வேளச்சேரியில் இருந்து, தாம்பரம் வரை சுமார் 15 கி.மீ. தூரத்துக்கு இலகு ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு செய்யும் பணி விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தாம்பரம் – வேளச் சேரி பறக்கும் ரயில் சேவையை இணைக்கும் விதமாக, இந்த ரயில்சேவை திட்டம் இருக்கும் என்றும், இதற்சகான ஆய்வு பணி 6 முதல் 8 மாதம் வரை நடைபெறும். அதன்பிறகு, விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கப்படும். திட்டத்தின் மதிப்பீடு, வழித்தடங்கள் உள்ளிட்டவை இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.