சென்னை,

 

டந்த 5 நாட்களாக தமிழகத்தையே புரட்டி போட்டுள்ள வருமானவரித்துறையினரின் ரெய்டு, நாடு முழுவதும் அனைவரின் கவனைத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த சோதனையின்போது சசிகலா குடும்பம் மூடி மறைத்த ரூ 1340 கோடி மதிப்பிலான எரி ஏய்ப்பு,  ரூ 5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் இதுவரை மதிப்பிடப்படாத ஏராளமான வைரக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 15 லாக்கர்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சசிகலாவின் ரத்த சொந்தங்களான தினகரன், திவாகரன், பாஸ்கரன், விவேக், கிருஷ்ணபிரியா உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில், ஜெயா டிவி, மிடாஸ் மதுபான ஆலை, கோடநாடு எஸ்டேட் போன்றவைகளில் நடைபெற்ற 5 நாள் சோதனையின்போது, 1430கோடி அளவிலான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயா டிவி அலுவலகம், அதன் நிர்வாக அதிகாரி விவேக், மற்றும் தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா போன்றோர் வீடுகளில் 5 நாட்கள் தொடர் சோதனை நடைபெற்றது. அப்போது,  தோண்ட தோண்ட ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்பட்டது.

ஏற்கனவே, பண மதிப்பிழப்பின்போது, 280 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது தகவலும்  தெரிய வந்துள்ள நிலையில், தற்போது ஏராளமான போலி கம்பெனிகள் தொடங்கி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வருமான வரித்துறையினர் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,

இதுவரை நடைபெற்ற சோதனையின் வாயிலாக ரூ. 1,430 கோடி வரி ஏய்ப்பு சசிகலா குடும்பத்தினர் செய்துள்ளது தெரிய வந்ததுள்ளது.

மேலும் கைப்பற்றப்பட்டுள்ள ஏராளமான ஆவனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

இதன் முடிவில் இந்த எரி ஏய்ப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

மேலும் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும்  ஏராளமான வைரங்களும் கைப்பற்றப்பட்டுள்ள தாகவும்,

வைரங்களின் மதிப்பு எத்தனை கோடி இருக்கும் என்பதை வைரங்களை மதிப்பிடுபவர்களை அழைத்து மதிப்பிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 15 வங்கி லாக்கர்கள் மற்றும் ஏராளமான வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளதாகவும் கூறினார்.

இந்த சோதனையின்போது ஏராளமான போலி நிறுவனங்களை அவர்கள் நடத்தி வந்தது கண்டறியப்பட்ட தாகவும், அதுகுறித்து, வருமான வரித் துறையைத் தணிக்கை செய்து வருவதாகவும், இதற்காக  சசிகலா வுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படும் என்றும் கூறி உள்ளார்.

ஏற்கனவே சசிகலா ஆதரவு புகழேந்தி, அவர்கள் மருத்துவர் மற்றும் ஜோசியர் போன்றோர் விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும், தற்போது ஜெயா டிவி சிஇஓவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே பண மதிப்பிழப்பின்போது,

இந்த பணம் அனைத்தும் சட்டத்துக்கு புறம்பாக சம்பாதிக்கப்பட்டதும், அதேபோல சட்டத்துக்கு புறம்பாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே,   புதுச்சேரியில் உள்ள ஸ்ரீலட்சுமி நகைக்கடையில் மட்டும் 168 கோடி ரூபாய்க்கு பணம் மாற்றப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இந்த சட்டவிரோத பண பரிமாற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மக்கள் அன்றாட செலவுக்கே பணமில்லாமல் அல்லாடியபோது, சசிகலா தரப்பினர் இவ்வளவு கோடி பணத்தை மாற்றிய உள்ள தகவலைக் கேட்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.