கொல்கத்தா:
தமிழக தலைமைச்செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியல் மட்டுமல்லாது டெல்லி அரசியலிலும் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரெய்டுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே தனக்கு பிடிக்காத டெல்லி அரசு தலைமைச்செயலர் வீட்டில் மத்திய அரசு சோதனை நடத்தி துன்புறுத்தியது.
தற்போது அதுபோல் தமிழக தலைமைச்செயலரையும் துன்புறுத்துகிறது. இதன் மூலம் மாநில அரசை அழிக்க முயற்சி செய்கிறது என மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
West Bengal CM Mamata Banerjee condemns raids on Tamil Nadu’s Chief Secretary. Terming it as deterrent for federal setup of governance. If the raids are to be conducted the concerned person should have been removed from the post so there is no disgrace to the post the person is holding.