ஹைதராபாத்:
ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று முதல் தெலுங்கானாவுக்குள் நுழைக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளது டன், தமிழ்நாடு, கேரளாவை கடந்து கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடில் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 11ம் தேதி கேரளாவில் தனது நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 19 நாட்கள் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகாவில் தனது நடைபணத்தை தொடங்கினார். இந்நிலையில், ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று முதல் தெலுங்கானாவுக்குள் நுழைக்கிறது.
கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய யாத்திரை இதுவரை 905 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளது. இது மொத்தம் 12 மாநிலங்கள் வழியாகச் சென்று, ஜம்மு-காஷ்மீரில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.