நாகர்கோவில்: குமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி, இன்று 3வது நாள் யாத்திரையை நாகர்கோவிலில் இருந்து காலை7மணிக்கு தொடங்கினார். முன்னதாக நாகர்கோவிலில் ராகுல் தங்கியிருந்த கல்லூரியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ராகுல் பாதயாத்திரை தொடங்கினார்.
ராகுலுடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அணிவகுத்து செல்கின்றனர். முன்னதாக, விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியனை ராகுல் சந்தித்து பேசினார். அதுபோல கடந்த முறை தமிழகம் வந்திருந்தபோது, காளான் பிரியாணி சமைத்து சாப்பிட்ட, கிராம சமையல் யூ டியூப் சேனலின் நிர்வாகிகளுடனும் கலந்துரையாடினார். அவர்களுடன் ராகுல் பாதயாத்திரையில் பங்குகொண்டுள்ளனர்.
இந்திய ஒற்றுமைக்கான நடை பயணத்தை கடந்த 7ம் தேதி மாலை ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் 3நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையானது, 7ந்தேதி சில கிலோ மீட்டர் துரம் மட்டுமே நடைபெற்று, இரவு அகஸ்தீஸ்வரத்தில் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று முதலாவது நாள் பாதயாத்திரை திட்டமிட்டபடி, காலை அகஸ்தீஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். மாலை நாகர்கோவில் வந்தடைந்தார். இரவு அங்கு தங்கியவர் இன்று காலை நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி பயணம் மேற்கொள்கிறார்.
முங்னனதாக இன்று 2ம் நாள் பாதயாத்திரை தொடக்கத்தின்போது, நாகர்கோவிலில் காலை 7 மணிக்கு கொடியேற்றப்பட்டது. 89 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டார். . நம் தேசத்தின் ஆன்மாவுக்காக எழுந்து நின்று, ஒன்றுபட்டு, போராட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, தேசிய கொடிக்கு மாரியாதை செய்த ராகுல்மற்றும் பாதசாரிகள் நடைபயணத்தை மேற்கொண்டனர்.
இன்றைய நடை பயணத்தில் நாகர்கோவில் அருகே சுங்கான் கடைப்பகுதியில் பொதுமக்கள் வழங்கிய புறாக்களை பறக்க விட்டார் ராகுல்காந்தி எம்.பி. ராஜீவ் காந்தி படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நாகர்கோவில், சுக்கான் கடை, வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, மேட்டுக்கடை வழியாக நடைபயணம் மேற்கொள்கிறார். இன்று இரவு தக்கலையில் தங்குகிறார்.
இந்த பயணத்தின்போது ராகுல் காந்தி வில்லுக்குறி பகுதி சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அப்போது விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ராகுலுடன் கலந்துரையாடினார். அவருடன் கரூர் எம்பி ஜோதி மணி உடன் இருந்தார். அப்போது பிஆர் பாண்டியன் ராகுல்காந்தியிடம் “கொரோனா ஊரடங்குக்கு பின் மிகப்பெரிய உணவு உற்பத்தியை விவசாயிகள் செய்து கொடுத்துவருகின்றனர். இருப்பினும் உள்நாட்டு வணிகம் பெருமளவு அழிந்து வரும் நிலையில் உள்ளது. பெரு நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி வருமான வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளையும் உள்நாட்டு பெரும் வணிகர்களையும் ஒன்றிணைத்தால் மட்டுமே அது இரு தரப்புக்கும் பயன் கிடைக்கும்” என்றார். அதை ராகுல் கவனமுடன் கேடுக்கொண்டார்.
தொடர்ந்து ராகுல் நடைபயணம் மேற்கொண்டார்.
காலையில் 9 கிலோமீட்டர் தூரமும், மதியம் 7 கிலோமீட்டர் என மொத்தம் 16 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். 10-ந்தேதி காலையில் 9.5 கிலோமீட்டரும், மாலையில் 9 கிலோமீட்டர் என 18.5 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
இதற்கிடையில், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியனை ராகுல் சந்தித்து கலந்துரையாடினார். அதுபோல கடந்த முறை சட்டமன்றத் தேர்தலின் போது பிரசாரம் செய்வதற்காக தமிழகம் வந்திருந்தபோது, காளான் பிரியாணி சமைத்து சாப்பிட்ட, கிராம சமையல் யூ டியூப் சேனலின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். அவர்களும் இன்று ராகுலுடன் நடைபயணம் மேற்கொள்கின்றனர்.