சதுரங்க ஒலிம்பியாட் இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு ராகுல் வாழ்த்து

Must read

புதுடெல்லி:
செஸ் ஒலிம்பியாட் 2020 இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சதுரங்க ஒலிம்பியாட் இறுதிப்போட்டிக்குள் இந்திய அணி முதல்முறையாக நுழைந்துள்ளது. இதுகுறித்து சுட்டுரையில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளதாவது,  இணையதள சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெறும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி நுழைந்துள்ளது பெருமைக்குரியது. போட்டியில் கலந்துகொண்டு வென்று வாருங்கள். லட்சக்கணக்கான இந்திய மக்களின் இதயம் உங்களை வழிநடத்தும்.  இவ்வாறு ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சதுரங்க ஒலிம்பியாட் 2020 இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இந்திய அணி, இந்திய வீரர் கோனேரு ஹம்பியின் சிறப்பான ஆட்டத்தால் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article