சென்னை:
தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிக ளுடன் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் உரையாடினார்.
அப்போது, பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென் இந்தியா சிறந்து விளங்குவதாக புகாழரம் சூட்டினார். அதைத்தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் பெண்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றனர்
மத்திய அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்
பெண்களை இரண்டாம் நிலையாக கருதாமல் சமநிலை என்றே கருத வேண்டும்
இன்று மாலை கன்னியாகுமரியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள வந்த ராகுல்காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அவர் பேசும்போது, வட இந்தியாவை விட தென்னிந்தியாவில்தான், குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் சிறப்பாக மதிக்கப்படுகிறாரகள்…. நடத்தப்படுகிறார்கள்… பெண்கள் விஷயத்தில், தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. தமிழகத்தை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று புகழாரம் சூட்டினார்.
பெண்கள் சமம் பெண்களை நாம் சமமாக கருத வேண்டும். மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி நிச்சயம் நிறைவேற்றும். ஆனால், நாடு முழுக்க ஒரே கலாச்சாரத்தை கொண்டு வர பாஜக முயல்கிறது. ஆனால் நம் நாடு பல கலாச்சாரங்களை கொண்டது. இந்தியாவின் பன்முக தன்மையை நாம் மதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.