ஜெயலலிதா உடலுக்கு ராகுல்காந்தி அஞ்சலி

Must read

சென்னை:
றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உடலுக்கு  பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்.
 
0
 
தற்போது அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் குலாப் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Jpeg
Jpeg

Jpeg
Jpeg

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article