கன்னியாகுமரி:
டை பயணத்துக்கு ஆதரவளித்த தமிழக மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்கிறார். அதன்படி குமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் 12 மாநிலங்கள் வழியாக 3570 கி.மீ. நடைபயணம் மேற்காள்கிறார். இந்த நடைபயணம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாகக் காஷ்மீரைச் சென்றடைகிறது.

இந்நிலையில், நடை பயணத்துக்கு ஆதரவளித்த தமிழக மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், திருவள்ளுவர் மற்றும் காமராஜரின் மண்ணுக்கு விடைபெறும் இந்த வேளையில் திருவள்ளுவர் மற்றும் காமராஜரின் மண்ணுக்கு விடைபெறும் இந்த வேளையில், நீங்கள் #BharatJodoYatra🇮🇳 க்கு அளித்த அளப்பரிய அன்புக்கும் ஆதரவுக்கும் தமிழக மக்களுக்கு எனது நன்றிகள் தெரிவித்துள்ளார்.