மோடி
மோடி

ன்று கோவாவில் பேசிய பிரதமர் மோடி, “என்னைக் கொல்ல சதி நடக்கிறது. நாட்டுக்காக மரணமடையவும் தயாராக இருக்கிறேன். தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன்” என்றெல்லாம் உருக்கமாக பேசி, கண்ணீர்விட்டு அழுதார்.
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி திடீரென அறிவித்ததை அடுத்து மக்கள் பணத்துக்கு திண்டாடி வருகிறார்கள். மோடிக்கு எதிரான அலை இந்தியா முழுதும் எழுந்துள்ளது.
ராகுல்
ராகுல்

இந்த நிலையில் மோடி கண்ணீர்விட்டதையும், கோபமாகவும் கிண்டலாகவும் சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டுவருகிறார்கள்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின்  துணைத் தலைவர் ராகுல் காந்தியும், மோடியின் கண்ணீர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், “நாட்டில் ஏழை மக்கள் அழுது கொண்டிருக்கும் போது மோடி சிரித்தார். இப்போது இங்கு அழுகிறார்.  இதன் மூலம் மோடியின் முகத்திரை கிழிந்து உண்மை வெளிப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட தினத்தில் இருந்து மக்கள் தவித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஜப்பான் சுற்றுப்பயணம் சென்ற மோடி, “கருப்பு பணத்துக்கான நடவடிக்கை இது” என்று புன்னகையுடன் தெரிவித்தார். இன்று மக்கள் எதிர்ப்பு எழுந்தவுடன் அழுகிறார்” என்பதையே ராகுல் குறிப்பிட்டுள்ளார்.