புதுடெல்லி: ஊழல் குறித்து தன்னிடம் நேருக்கு நேர் வாதம் புரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பயமாக இருந்தால், அவர் வெளிப்படையாகவாவது பேசட்டும் என யோசனை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தேசியப் பாதுகாப்பு, ரஃபேல் விவகாரம் போன்றவை குறித்து, பிரதமர் தன்னிடம் நேருக்கு நேர் விவாதத்திற்கு வரவேண்டுமென, தொடர்ச்சியாக சவால் விடுத்து வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ஆனால், இதுவரை மோடியிடமிருந்துதான் எந்த பதிலும் இல்லை.

“மோடிக்கு விவாதம் செய்ய தைரியமில்லாமல் போனால், அவர், ஒவ்வொரு விஷயம் குறித்தும் வெளிப்படையாக பேச முயற்சிக்கட்டும்.

1. ரஃபேல் + அணில் அம்பானி
2. நீரவ் மோடி
3. அமித்ஷா + பணமதிப்பிழப்பு நடவடிக்கை

என்று ஒவ்வொரு விஷயமாக பேசட்டும்” என டிவீட் செய்துள்ளார் ராகுல் காந்தி.

மேலும், “நேரடியான விவாதம் நடைபெற்றால், அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேசமயம், காங்கிரஸ் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாரதீய ஜனதா, ராகுல் காந்தி ஒரு விபரமற்ற தலைவர் எனவும் விமர்சித்துள்ளது.

– மதுரை மாயாண்டி